தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் ஓட்டப்பிடாரம் வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியரின் வரவேற்பு அழைக்கப்பட்டது, அங்கு மாணவர்களின் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி கலை நிகழ்ச்சி ஆகிய ஏற்பாடுகளை கல்வியாளர் பிரிவு மந்திரமூர்த்தி கோவில் பிள்ளை அவர்கள் செய்திருந்தார்கள், நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாட்டுப்பண் இசைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி வ.உ.சி அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு பாஜக சார்பில் சால்வே அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட த ,ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே அதிக சுதந்திரப் போராட்ட தியாகிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு அதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வ உ சிதம்பரம் பிள்ளை வீரபாண்டிய கட்டபொம்மன் மாமன்னன் சுந்தரலிங்கம் எட்டையாபுரம் பாரதியார் என புகழ்பெற்ற மாவட்டம் .
ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். வ.உ.சி. 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். டிசம்பர் 1906 ல் கப்பல்கள் வாங்குவதற்கு பம்பாய் சென்று திலகர் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்கள் இயக்கப்பட்டன.
தனது சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று சிறை சென்று கடைசி காலத்தில் ஏழ்மையாக வாழ்ந்து மறைந்த தியாகி வ. உ. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள் , மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணன் அவர்கள், கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் நங்கமுத்து, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோவில்பிள்ளை ஒன்றியம் கல்வியாளர் செயலாளர் மந்திரம் மூர்த்தி அவர்கள், விவசாய அணி மாவட்ட செயலாளர் பேச்சி அவர்கள் ,
மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் அவர்கள் பிற மொழி பிரிவு மாவட்டச் செயலாளர் தம்பான் அவர்கள் , ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் அவர்கள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.