வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! வனத்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு!!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி, யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. அந்த மலையில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காணவும் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வனவிலங்குகளை துன்புறுத்துவதாகவும் வனக்கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வந்தன. இதனை தொடர்ந்து வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுற்றுலா பணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஆழியார் சோதனை சாவடி வழியாக வால்பாறை செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.

அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழியார் சோதனை சாவடியை தாண்டி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. விடுதி உரிமையாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்
பட்டுள்ளது.

இவ்வாறு விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளையவரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts