சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள S.ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது19). இவர் சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் சிங்கம்புணரியை சேர்ந்த, இவரை விட இரண்டு வயது மூத்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இவர்களின் காதலை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் கண்டித்ததில் அந்த மாணவி, அழகேசனுடன் இருந்த காதலை அதன் பின் முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாத அழகேசன், அந்த மாணவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, அவரை மிரட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதையறிந்த அந்த மாணவி சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரது புகாரின் மீது சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து மீனாட்சி விசாரணை நடத்தினார். தீவிர விசாரணையின் பின்பு, அழகேசன் மீது சார்பு ஆய்வாளர் ராஜவேல்
வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தார். அதனைத் தொடர்ந்து சிங்கம்புணரி நீதிமன்ற நீதிபதியின் முன்பு அழகேசன் நேர் நிறுத்தப்பட்டு, திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
– பாரூக் & ராயல் ஹமீது.