பசுவந்தனையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் திமுகவின் நிறுவனத்தலைவர் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பசுவந்தனையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துனைபெருந்தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமையில் கழக கொடி ஏற்றி அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா வரலாறு:

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை தமிழ், இந்தி, ஆங்கிலம் முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

இந்த நிகழ்வின போது எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி மாவட்ட பிரதிநிதி சத்தியராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் குதிரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா கே.சண்முகபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர் கோயில் நிர்வாகி பாலமுருகன் பரமன்பச்சேரி கணேசன் பசுவந்தனை அய்யம்பிள்ளை சண்முகசுந்தரம் சுப்பிரமணியமரம் இளைஞரனி முத்துராஜ் விட்லபுரம் வேலுப்பிள்ளை காட்டுநாயக்கன்பட்டி கண்ணன் ஆதனூர் பாலமுருகன் கைலசபுரம் சுப்பிரமணியம், தூத்துக்குடி வடக்கு ஓட்டப்பிடரம் கிழக்கு ஒன்றிய திமுக க.மணிராஜ் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைகழக செயலாளர்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts