கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிக்கு அருகே அமைந்துள்ள பூப்பாறை செல்லும் வழியில் அமைந்திருக்கும் ராஜா காடு பண்ணையார் குட்டி என்ற இடத்தில் இன்று காலையில் வழக்கும்போல வேலைக்கு சென்று வட மாநிலத்தவர் துர்நாற்றம் அடிப்பதை பார்த்து அருகில் சென்றுள்ளார் ஆற்றின் ஓரத்தில் செடிகளுக்கு இடையே அழகிய நிலையில் பிணம் ஒதுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு சடலத்தை மீட்டெடுத்தனர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இறந்திருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண் சடலமாக இருக்கலாம் என தெரிகிறது. உடனடியாக இடுக்கி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர். தடையியல் நிபுணர்கள் சோதனை செய்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.