கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள குமரன் சாலை மற்றும் காவல் நிலையம் மற்றும் இந்தியன் பேங்க் பின்புறம் உள்ள சாலைகளில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் அந்த சாலைகளில் செல்லும் மற்ற இருசக்கர நான்கு வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.
பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு கூறியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது இந்த சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டால் தான் நடுரோட்டில் நிறுத்தாமல் செல்வார்கள் என அப்பகுதியின் பொதுமக்களும் மற்ற வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கிறார்கள். நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்???
நாளைய வரலாறு செய்திக்காக
திவ்ய குமார் வால்பாறை.
நிருபர்