தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 11ம் ஆண்டு தசரா திருவிழா கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
அதில் கழக நிர்வாகிகள் தனபாலன், தாமோதரன், கோபி முருகன் சூர்யா மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சாமி மனோ விஜயா செல்வக்கனி பரமேஸ்வரி முத்தம்மாள் சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.