தருவைகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு ஒருகோடி பனைவிதை நடும் விழா தொடர்ச்சி எம்.எல்.ஏ.சண்முகையா துவக்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் நெடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் , அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு மேற்கொண்டது.
ஒரு கோடி பனை விதை நடவு செய்யும் உலக சாதனை நிகழ்வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 30 தேதி காலையில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கடற்கரைகளில் அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடி பனைவிதை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் 30,000 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சுந்நரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவரும் தூத்துக்குடி மாவட்ட கிரீன்கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் , ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா,தருவைக்குளம் பங்குத்தந்தை அந்தோனி மிக்கேல் வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு பனைவிதை நடவுப்பணியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன், ராமராஜன்,வட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சி மன்றத்தலைவர் க.காடோடி, காவல் உதவி ஆய்வாளர் முத்துமாலை, திமுக மீனவர் அணி மாவட்டத் துணைத் தலைவர் அந்தோனி நிக்கோலஸ் , இளைஞர் அணி நிர்வாகிகள் அனிட்டன், ராபின்சன் ஞானப்பிரகாசம் , தயாளன், பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர் கார்த்திகேஸ்வரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் , ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பனைவிதை நடவுப்பணியில் ஈடுபட்டனர். நிறைவாக ஊராட்சி மன்ற செயலர் அந்தோனி நவமணி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.