நீட் தேர்வில் மற்றும் மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களை ஏமாற்றும் மத்திய அரசு என தேவேந்திர குல வேளாளர் வாக்காளர் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பரபரப்பு பேச்சு.!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தேவா திருமண மண்டபத்தில் நேற்று தேவேந்திர குல வாக்காளர் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்க பேரவை தலைவர் L.k முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்திரன் ஜெயக்குமார் பேசுகையில்:

நீட் தேர்வில் தேவேந்திரர் வேளாளர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களையும் மத்திய அரசு ஏமாற்றுகிறது தமிழக அரசின் நிதியிலிருந்து வட இந்தியர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்குகிறது. SSC தேர்வில் ஒட்டுமொத்தமாக தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அதற்கான புள்ளிவிவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது.

கோவில்பட்டி பரமசிவன் அவர்கள் பேசியது:
தமிழ்நாட்டில் 9 பாராளுமன்ற தொகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் அதிகமாக உள்ளது.‌ தேவேந்திர வேளாளர்கள் பல அரசியல் கட்சியில் இருப்பதால் நமது உரிமைகளை கேட்டு பெற மிகவும் பாதிப்பாக உள்ளது வரும் தேர்தல்களில் தேவேந்திர குல வேளாளர் வாக்காளர்கள் தேவேந்திரகுல வேட்பாளருக்கு ஓட்டு அளித்தால் நம்முடைய செல்வாக்கு என்ன என்பது தெரியவரும்.

இந்த மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நீட் தேர்வு போது சோதனை என்ற பெயரில் தமிழகத்தின் மாணவ மாணவிகளை மனச்சோர்வு செய்யும் செயல்கள் வன்மையாக கண்டிக்கிறோம், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர் இளைஞர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அனைத்து சாதிகளுக்கும் வேண்டும், இந்தியாவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூடப்பட வேண்டும். தேவேந்திர வேளாளர் சாதியினரை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி முற்பட்ட பிரிவில் சேர்க்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ்வரி குறைத்து நாடு முழுவதும் ஒரே சீரான வரியை நிர்ணயிக்க வேண்டும் என தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts