கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள கூட்டார் என்ற இடத்தில் பள்ளி மாணவி சம்மோக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி காதலிப்பதாக கூறி இரண்டு வாலிபர்கள் நிவின் மற்றும் அராமல் போன்றவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு, மூன்று சிறுமிகளை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அதில் ஒரு சிறுமி ஒரு நபரை காதலித்து வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ பதிவுகளை காட்டி பலமுறை பலாத்காரம் செய்தது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளி மாணவிக்கு சிறப்பு( கவுன்சிலிங்) வழங்கிய பொழுது அவர் இதை குறித்து ஆலோசனை நிபுணரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று வலைதளங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சனைகளால் மிக ஆபத்தான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.
எனவே மிகவும் பாதுகாப்பாக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் சிறுவர்கள் வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. சமூக அக்கறையுடன் நாளைய வரலாறு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.