கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளர்கள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இன்று தேயிலை விவசாயத்திற்கு பதிலாக ஒரு சில தொழிலாளர்கள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். வால்பாறை ஆத்து மட்டம் பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, சுரேஷ்,முருகன், வைரமுத்து ஆகியோரது மாடுகளை முடிஸ் செல்லும் புல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.
அவ்வாறு சென்ற மாடுகளை மர்ம ஆசாமிகள் மாட்டின் வால்களை வெட்டி துன்புறுத்தி உள்ளார்கள். உடனே மாட்டின் உரிமையாளர்கள் வால்பாறை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர்.
காவல்துறை வழக்கு பதிவு செய்து மாட்டின் வாலை வெட்டியவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதனால் முடிஸ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்,
-திவ்யகுமார்.