தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடராம் அருகே உள்ள வடக்கு பரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் பாலமுருகன்(22) இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் இந்திரா நகரை சேர்ந்த ஆண்டன் மகன் ஆஷிக்(21) இருவரும் நேற்று மாலை தூத்துக்குடிக்கு சென்று விட்டு குறுக்குசாலை வழியாக மோட்டார் சைக்கிள் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பாலமுருகன் ஓட்டி வந்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலஅரசடி விலக்கு தாண்டி வந்தபோது பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். ஆஷிக்கை பலத்த காயத்துடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவத்தை அறிந்த புதியம்புத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த பாலமுருகன் உடலை மீட்டு பிரேதா பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.