தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பெய்த மிக கனமழையில் உமரிக்காட்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பழைய காயலை சார்ந்த சுமித் என்ற மாணவனின் குடும்பத்தினர் வீட்டின் மீது மரம், மின்கம்பங்கள் சாய்ந்து வீடு இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக இருந்த நிலையில் உமரிக்காடு சமூக ஆர்வலரும், ஊராட்சி மன்ற தலைவருமான ராஜேஷ் குமார் அவர்களுக்கு மாணவர் சுமித்தின் உறவினர் தகவல் தெரிவித்ததின் பெயரில் உமரிக்காடு இளைஞர்கள் துணையோடு இரவு 11:00 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவரின் நான்கு சக்கர வாகனத்தில் மழையில் சாலையில் நீர் தேங்கியும் ,கடும் இருளையும் ஆபத்தை பொருட்படுத்தாமல் சுமித் மற்றும் அவரின் தாய் தந்தையார் சகோதரியை மீட்டு உமரிக்காடுஉறவினர் வீட்டில் ஒப்படைத்தனர் மற்றும் 20.12.2023 புதன்கிழமை கடுமையான வெள்ளத்தில் மிகுந்த உமரிக்காடு ஆற்றங்கரை தெரு அருகில் இரண்டு நாட்களாக வீட்டினுள் தனித்தனியாக ஆபத்தான முறையில் அலறல் சத்தத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு முதியவர்களை படகு மற்றும் மீட்பு படை வராததை எதிர்பாராமல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார் ஆலடியூர் இளைஞர்களுடன் ஜேசிபி வாகனத்தில் பயணித்து இரண்டு முதியவர்களை உணவில்லாமல் உயிருக்கு போராடியவர்களை உமரிக்காடு திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவளித்து தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றினார்கள் .
மிக கனமழை மற்றும் வெள்ளத்தில் மூன்று குடும்பத்தினரை காப்பாற்றிய சமூக அலுவலரும் ,ஊராட்சி மன்ற தலைவருமான டாக்டர்.எஸ். ராஜேஷ் குமார் அவர்களுக்கு ஏரல் வட்டாட்சியர் கோபால் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இது குறித்து ராஜேஷ்குமார் அவர்கள் கூறிய போது இந்த மீட்பு போராட்டத்திற்கு என்னுடன் இணைந்து செயல்பட்ட உமரிக்காடு ,ஆலடியூர் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரிகள் எங்களை அழைத்து பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவப்படுத்துவது இன்னும் பல சேவைகள் செய்ய தூண்டும் என்றார். ஊராட்சி மக்கள் சிலர் கூறும்போது சமூக ஆர்வலராக சேவை செய்து தனியார் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார், கொரோனாவிலும் மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்றார். கடும் ஆபத்தில் எங்கள் மக்களுக்கு உதவுவதில் திறமையாக கையாளுகிறார் என்று பொதுமக்கள் கூறினார்கள். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.