கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் நடைபெற்ற 75-ம் ஆண்டு பின்லே கால்பந்தாட்டம் இறுதி போட்டிகள் 09-02-2024 அன்று நடைபெற்றது. மூணாறில் புகழ்பெற்ற கால்பந்து போட்டி பின்லே கால்பந்தாட்டம் திருவிழா போல வெகு விமர்சியாக நடைபெறும்.
சிறந்த வீரர்.
போட்டியை காண்பதற்கு எஸ்டேட் பகுதியில் வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாணவர்கள் அனைவரும் போட்டியை காண்பதற்கு வருவார்கள். இந்த வருடம் இறுதிப் போட்டிக்கு கூடாரவளே எஸ்டேட் அணியும் ஐ டி டி அணியும் தேர்வு செய்யப்பட்ட இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது போட்டியில் கூடாரவளை எஸ்டேட் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.
பின்லே கால்பந்தாட்டம் கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது நிறைவடைந்தது 9-3-2024ல் ஆகும். மொத்தம் 14 குழுக்கள் கொண்ட மேட்ச் நடைபெற்றது. இதில் கூடாரவளே ஐடிடி விளையாட்டு மேட்சில் கூடாரவளை நான்கு கோளும் ஐடிடி பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 75 ஆம் ஆண்டு பின்லே கால்பந்தாட்டத்தில் முதல் பரிசை கூடாரவளை அணியும் இரண்டாம் பரிசு ஐடிடி அணியும், மூன்றாம் பரிசு மாட்டுப்பெட்டி அணியும் வெற்றி பெற்றது.
இந்த வருடம் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பரிசு கூடாரவளை அணியை சேர்ந்த ஜோலி ஆபிரகாம் அவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல்கீப்பர் விருது மாட்டுப்பட்டி அணியை சேர்ந்த ஜெயபாலுக்கு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் இதற்கு முன் விளையாடிய பழைய பின்ல கால்பந்தாட்ட வீரர்களுக்கு நினைவு கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா மூணாறு,கேரளா.