கோவை பீளமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 48). இவர் கோவை மாநகர காவலில் பீளமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுந்தராபுரத்தில் வசித்து வந்தார்.
இதனிடையே இரண்டு நாட்கள் விடுப்பில் நடேசன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார். இந்த சூழலில், மாலை 6 மணி அளவில் அவர் வீட்டில் இருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு நாளைய வரலாறு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.