‘தமிழக வெற்றிக் கழகம்’ கொடி அறிமுகமானதை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கட்சியினர்!

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற அறிமுக விழா நிகழ்ச்சியில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி கட்சி நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கட்சியினர் புதூர் ஒன்றிய பொறுப்பாளர் செண்பகக்கனி தலைமையில், கட்சி கொடியை பொதுமக்களிடம் காட்டி த.வெ.க கட்சிக்கொடி அறிமுகமான செய்தியை மகிழ்ச்சி பொங்க கூறி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடை வியாபாரிகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும், அங்கிருந்த ஆட்டோக்களில் அமர்ந்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் கொடியை பொதுமக்களிடம் காட்டி, தங்களது கட்சிக்கொடியை தலைவர் விஜய் அறிமுகம் செய்துவிட்டார் என்பதை விளக்கி தொடர்ந்து அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்வில், விளாத்திகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள் பிரவீன்குமார்,மணிகண்டன்,அருள்ராஜ்,ரவிச்சந்திரன்,சந்திரன்,அழகுராஜ், முனிஸ்வரன்,ராமகிருஷ்ணன்,கபாலீஸ்வரன்,விஜயகுமார் உட்பட கட்சியினர் ஏராளமானோர் கட்சிக்கொடி அறிமுகமானதை கொண்டாடினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts