Trending

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலையில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யூனியன் துணை சேர்மன் காசி விசுவநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை!!

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் ஓட்டப்பிடாரம் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தவகையில் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலை ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு குறுக்குசாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள் தலைமை வகித்தார்.

தொடர்ந்து யூனியன் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்து குறுக்குசாலை ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் யூனியன் அலுவலக இளநிலை உதவியாளர் அன்னலட்சுமி, வீரலட்சுமி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள் வீரபத்திரன்,

மூக்கையா, கற்பகவல்லி, கால்நடை கால்நடைத்துறை சதீஷ்குமார், கிராம செவிலியர் லட்சுமி, வேளாண்மை துறை வெண்ணிலா, கூட்டுறவுத்துறை முருகன், மக்கள் நல பணியாளர் கணபதி மற்றும் ஊராட்சி பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .முடிவில் ஊராட்சி செயலர் ஜெகன் நன்றியுரை ஆற்றினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-எஸ் நிகில், ஓட்டபிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts