வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. அடுத்து இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையை பொறுத்தவரை சரவணம்பட்டி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம், விளாங்குறிச்சி, குனியமுத்தூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
கோவை சிவானந்தா காலனி முதல் சாய்பாபா காலனி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளதால் அதற்கு கீழே வாகனங்கள் சென்று வருகின்றது. இந்நிலையில் அங்கு தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் செல்ல அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு நேற்று முன் தினம் தனியார் பேருந்து ஒன்றே சிக்கிக்கொண்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் கோவையில் இன்று இரண்டாவது நாளாக கனமழை வெளுத்து வாங்கியதால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாய்பாபா காலனி ரயில்வே சுரங்கப்பாதையில் அரசு பேருந்து சிக்கி உள்ளது, பேருந்தில் பயணித்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை விடாமல் பெய்ததால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அதே பகுதியில் தனியார் பேருந்து சிக்கிய நிலையில் பயணிகள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அரசு பேருந்து சிக்கி உள்ளது ஏன் முன்கூட்டியே அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மழைக்காலங்களில் அங்குள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவது தொடர்கதையாகி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.