கோவை மாவட்டம் வால்பாறை சி ஐ டி யு ஆட்டோ சங்க நிர்வாகிகள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று வால்பாறை காவல் துணை ஆய்வாளர் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக சி ஐ டி யு நிர்வாகிகள் கூறுகையில் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மக்கள் குறைத்திருக்கும் முகாமில் வால்பாறை பகுதிக்கு புதிதாக ஆட்டோக்களுக்கு பர்மிட் கொடுப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை தற்போது இருக்கும் மக்கள் தொகை மிகவும் குறைவு தினந்தோறும் ஒருவர் இருவர் என்று வால்பாறை விட்டு வெளி மாவட்டங்களுக்கு குடியேறுகிறார்கள் வால்பாறையில் மாற்று தொழில் கிடையாது இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு நிரந்தர கார் பார்க்கிங் வசதி கிடையாது சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு வழி பாதையாக உள்ளது.
இந்நிலையில், தற்பொழுது இருக்கும் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு பாதுகாப்பான இடங்கள் கிடையாது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன வரி உயர்வு போன்ற பலவேறு காரணங்களால் நாங்கள் இருக்கின்ற ஆட்டோக்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றோம். இதை நம்பி தான் தற்பொழுது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது இருக்கும் மக்கள் தொகையில் இன்னும் அதிகமாக ஆட்டோக்கள் இப்பகுதியில் இயங்கினால் எங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக இருக்கும்.
தற்பொழுது ஆட்டோ பர்மிட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு சிலரை தவிர பல பேர் ஒருவரே நான்கு ஐந்து பேரு அனுமதிக்கு விண்ணப்பங்கள் கொடுத்துள்ளார்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிதாக வால்பாறை பகுதிக்கு ஆட்டோ பர்மிட் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்படி முடிவு எடுக்காவிடில் எங்கள் அமைப்பின் சார்பாக ஆட்சியாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று ஒட்டுமொத்த சி ஐ டி யு ஆட்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இவர்களுக்கு தமிழக வணிகர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– M.சுரேஷ்குமார்.