தூத்துக்குடி மாவட்டம் :06.11.2024 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரோந்து மேற்கொண்டு ஆய்வு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை (07.11.2024) முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடைபெறுவதையொட்டி இன்று (06.11.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குளிக்கும்போது ஆபத்து நேரங்களில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தலைமையில் 10 கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுடன் கடற்கரையோரமாக பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்து ஆபத்து நேரங்களில் உடனடியாக செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உதவ வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.