கந்தர்வக்கோட்டை பிப் 07.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்
கந்தர்வக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித் குமார் வழிக்காட்டுதலின் படி,வீரடிப்பட்டி மருத்துவ அலுவலர் பரணிதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீரடிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் பேசும் பொழுது தொழுநோய் அல்லது ஹேன்சன் நோய் என்பது மைக்கோபாக்டீரியம் தொழுநோய் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நாள்பட்ட தொற்று நோயாகும்.
இந்த நோய் முதன்மையாக பாதிக்கப்பட்ட நபர்களின் தோல், புற நரம்புகள், மேல் சுவாசக்குழாய் சளி மற்றும் கண்களைப் பாதிக்கிறது. தொழுநோய் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும், இந்த நோய் சிகிச்சையளிக்கக்கூடியது, நீண்ட நாட்களாக உள்ள தேமல்கள் தேமலில் உணர்ச்சி இல்லாமல் இருப்பது தொழுநோய் என்பதற்கான அறிகுறி ஆகும். தொழு நோயை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலுமாக குணப்படுத்தலாம். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தொழுநோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களுக்கு தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற்றார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை தொழுநோய் குறித்து உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.