கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள முடிஸ் பகுதியில் தபால் நிலையம், காவல் நிலையம், ஏடிஎம் வசதி, சுகாதார மருத்துவமனை, கூட்டு வங்கி, மேல்நிலைப்பள்ளி உள்ளது.
பின்பு அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கூடும் இடமான பேருந்து நிலையம் அருகாமையில் பாத்ரூம் வசதி இல்லை.
அப்பகுதியில் ஏதேனும் அவசர காலத்தில் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் 108 வாகன ஓட்டுநர்கள் இருப்பதற்கும் இடமில்லை உறங்குவதற்கும் இடமில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
பின்பு அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் இடத்தில் கட்டிடக்கலைப்பிடம் தரமற்ற முறையில் உள்ளது. மற்றொரு கழிப்பிடம் இடமில்லாமல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வரும் எஸ்டேட் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசரத்திற்கு செல்வதற்கு கூட இடமில்லாமல் தவிக்கின்றனர்.
இதனைக் கண்டு அப்பகுதியில் உள்ள கவுன்சிலர்களும் வால்பாறை நகராட்சி ஆய்வாளர்களும் கண்டு கொள்வதில்லை. பலமுறை அவர்கள் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனைக் கண்டது நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் குற்றச்சாட்டாக இருந்துள்ளது.
-திவ்யகுமார்.