நீங்கள் பார்க்கும் படம், கோவை,
ராதாகிருஷ்ணா மில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி விளாங்குறிச்சி ரோட்டில் கடை வீதிக்கு வரும் வழியில் சித்ரா ஸ்டோர் துணிக் கடைக்குக் கொஞ்சம் தள்ளி வலது பக்கச் சாலையில் இன்று (14.02.25 )காலையில் எடுக்கப்பட்டது.
“குப்பை கொட்டாதீர்கள்” என்ற அறிவிப்பின் மீதே குப்பை கொட்டியிருக்கிறார்களே! இது கல்வியிறிவு இல்லாதோர் வசிப்பிடமோ? அறிவிப்பில் என்ன எழுதி இருக்கிறதென்று தெரியவில்லை, பாவம். அல்லது, குப்பை கொட்டிய பிறகு அறிவிப்பு வைத்திருப்பார்களோ!
இங்கு மட்டுமல்ல, ஊரில் பல இடங்களிலும் மக்களின் இது போன்ற அலட்சியப் போக்கைக் காண முடிகிறது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நாள் தோறும் வீடுவீடாக வந்து குப்பைகளைச் சேகரித்துச் செல்கின்றனர்.பிறகு ஏன் இப்படி?
எது எப்படியோ, “ஊர் சுத்தம் உன் கையில்” என்பதை இவர்கள் காதில் யார் தான் ஊதுவதோ!
—பொதுநலப் பதிவு
-Ln. இந்திராதேவி முருகேசன் & சோலை. ஜெய்க்குமார்.