மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா மலரும் நினைவுகள் குழு நிர்வாகிகள் போட்டோகிராபர் ஜான், பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி, நேரில் வாழ்த்து..!!
மதுக்கரை மார்க்கெட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் கோவை தினகரன் செய்திப்பிரிவு உதவி ஆசிரியர் ஆர்.கே.(விக்கிரம பூபதி வாழ்த்தி பேசிய தருணத்தில்.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 76-வது குடியரசு தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திமுக கோவை மாநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜே.ராகுல் ராம் மற்றும் அவரது இல்லத்தரசி சாரதா ஆகியோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீடியா 360 நியூஸ் முகம்மது ஷாஜுதீன் அவர்களுக்கு மலரும் நினைவுகள் குழு சார்பில் லோகோ மற்றும் புகைப்படத்துடன் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அருகில் ஆர்.கே.விக்கிரம பூபதி, திமுக நிர்வாகி ராகுல் ராம் மற்றும் அவரது மனைவி சாரதா.
மேலும் கௌரவ விருந்தினராக கோவை மதுக்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாலம் பாஷா கலந்து கொண்டார். முன்னதாக, இவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது.
(திரு.சாலம் பாஷா அவர்களுக்கு மலரும் நினைவுகள் காலண்டர் -பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி வழங்கிய போது…)
76 வது குடியரசு தின விழாவில் பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, தலைமை ஆசிரியர் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை அளித்தனர்.
தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜே. ராகுல் ராம், சாரதா மற்றும் மதுக்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஷாலம் பாஷா ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும்
மதுக்கரை *குவாரி ஆபீஸ் ராதா ஸ்டுடியோ உரிமையாளருமான திரு.ஜான் அவர்கள் சிறப்பு அழைப்பாளருக்கு பொன்னாடை போர்த்தினார்.
தொடர்ந்து, கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சி இ ஓ நித்யா ராஜ்குமார், டெக்சிட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பூங்குன்றன் மற்றும் ஜெயசித்ரா, 11-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கமலம், 27 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி, நடராஜ், பத்திரிக்கையாளரும் தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியருமான ஆர்.கே.(விக்கிரம) பூபதி, மதுக்கரை குவாரி ஆபீஸ், ராதா ஸ்டுடியோ உரிமையாளரும் புகைப்படக் கலைஞருமான ஜான், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகேந்திரன் மற்றும் வினோத் ஆகியோருக்கு ஆசிரியர்கள் கௌரவித்தனர்.
(கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் இருந்து….ஒளிபரப்பாகும்…இரத்தினவாணி சமுதாய வானொலி நிலைய இயக்குனர் ஜெ.மகேந்திரன் கரங்களில்….)
மலரும் நினைவுகள் தினசரி காலண்டர் 2025 தினகரன் நாளிதழ்
செய்திப்பிரிவு -உதவி ஆசிரியர் ஆர் கே விக்கிரம பூபதி வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் கோவை மாநகர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜே ராகுல் ராம் மாணவர் மத்தியில், விளையாட்டை ஊக்கப்படுத்தியும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருவது குறித்தும் புகழாரம் சூட்டினார்.
(நமது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியின் கிடைப்பதற்கு அரிதான பழைய புகைப்படம் பொறித்த தினசரி காலண்டர் மற்றும் மலரும் நினைவுகள் லோகோவுடன் கூடிய அடையாள அட்டை , வாழ்த்து கடிதம் ஆகியவை பெற்ற மகிழ்ச்சியில்…. முன்னாள் மாணவர் திரு.ரகுபதி அவர்கள் Star health insurance மேலாளர். அருகில் மதுக்கரை *குவாரி ஆபீஸ் ராதா ஸ்டுடியோ உரிமையாளர் திரு.ஜான் அவர்கள்.)
மேலும் மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுக்கு தேவையான அனைத்தும் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
(அழகிய நீலம், பச்சை வண்ணத்தில்… * மலரும் நினைவுகள் அடையாள அட்டை, ரோப்…..!!
நீங்கவாங்கிட்டீங்களா நண்பர்களே ….)
தொடர்ந்து, கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சிஇஓ நித்யா ராம்குமார் மற்றும் மலரும் நினைவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளரும் பத்திரிக்கையாளரும் தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியருமான ஆர்.கே.விக்கிரம பூபதி, மலரும் நினைவுகள் குழு நிர்வாகியும் ராதா ஸ்டுடியோ உரிமையாளரும் புகைப்பட கலைஞருமான ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து
(நமது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி பழைய படம் பொறித்த காலண்டர் மற்றும் மலரும் நினைவுகள் லோகோவுடன் கூடிய அடையாள அட்டை , வாழ்த்து கடிதம் ஆகியலை பெற்ற மகிழ்ச்சியில் முன்னாள் மாணவர் திரு.தினேஷ்குமார் அவர்கள்)
மேலும் விழாவை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ராதா ஸ்டுடியோ ஜான் பங்களிப்புடன் முன்னின்று நடத்திய மீடியா 360 நியூஸ் முகம்மது ஷாஜுதீன், எவரெஸ்ட் தமிழ் நியூஸ் சுரேஸ் ஆகியோருக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த முன்னாள் மாணவ மாணவிகள் பிரம்மாண்ட மலரும் நினைவுகள் குழு சார்பில் லோகோ மற்றும் புகைப்படத்துடன் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
(மலரும் நினைவுகள் 2025 தினசரி காலண்டர்)
சிறப்பு விருந்தினர்கள் ராகுல் ராம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாலம் பாஷா ஆகியோருக்கு மலரும் நினைவுகள் 2025 தினசரி காலண்டர்களை விழா மேடையில் மலரும் நினைவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி வழங்கினார்.
(நமது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியின் கிடைப்பதற்கு அரிதான பழைய புகைப்படம் பொறித்த தினசரி காலண்டர் மற்றும் மலரும் நினைவுகள் லோகோவுடன் கூடிய அடையாள அட்டை , வாழ்த்து கடிதம் ஆகியவை பெற்ற மகிழ்ச்சியில் எனது ஆருயிர் தோழனும் மதுக்கரை கவிநயா டியூஷன் மையத்தின் உரிமையாளரும் முன்னாள் மாணவருமான திரு.விஜயராஜா அவர்கள். அருகில்… பத்திரிக்கையாளன்
நண்பன் ஆர்.கே.விக்கிரம பூபதி)
( மலரும் நினைவுகள் குழு – மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – (மதுக்கரை மார்க்கெட்) ஆகிய பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவ,,மாணவிகள் குழுவில் இணைய வாட்சப் எண் : 99443 28589).
(நிலைய இயக்குனர் திரு.மகேந்திரன்)
இதைத்தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கொடிகாத்த குமரனின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் மாணவர்களின் பேச்சுப்போட்டிகள் அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து, 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவருக்காக நடைபெற்ற பல்வேறு வகையான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
(திரு.ராகுல் ராம் அவர்களுக்கு மலரும் நினைவுகள் காலண்டர் -பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி வழங்கிய போது….)
மேலும், மாணவர்களின் விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு விருந்தினர் ஏற்பாட்டில் பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
(மேலும் விழாவை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ராதா ஸ்டுடியோ ஜான் பங்களிப்புடன் முன்னின்று நடத்திய எவரெஸ்ட் தமிழ் நியூஸ் சுரேஸ் அவர்களுக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த முன்னாள் மாணவ மாணவிகள் பிரயாண்ட மலரும் நினைவுகள் குழு சார்பில் லோகோ மற்றும் புகைப்படத்துடன் நினைவு பரிசை தலைமையாசிரியர் ஜெயந்தி வழங்கினார். அருகில் மலரும் நினைவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் ஆர்.கே விக்கிரம பூபதி)
இறுதியாக பள்ளி மாணவர்களை சிறப்பாக வழி நடத்திய தலைமையாசிரியர் ஜெயந்தி, கல்வி மேலாண்மை குழு தலைவர் ரேவதி, துணை தலைவர் ஷன்பிய, துணை ஆசிரியர் கற்பகவல்லி, ஆசிரியர்கள் ட்ரீட்டா பார்மிளா குமாரி, ராஜலட்சுமி, உமா மகேஸ்வரி, தமிழரசி, பிலிசிட்டா, கற்பகவல்லி ஆகியோருக்கு சிறப்பு அழைப்பாளர்கள் விருதுகளை வழங்கி கௌரவித்தனர். முடிவில் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஆர்.கே.விக்கிரம பூபதி