கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கல்விக்கான நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கல்விக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா வரவேற்றார். செயற்குழுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடத்தை அதிகரித்து நிரப்ப வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கோவிந்தராசு தலைமையாசிரியர், கோவிந்தசாமி தலைமை ஆசிரியர், அப்துல் ஹமீது ஆசிரியர், செல்வகுமார், தலைமை ஆசிரியர்கள் செல்வி, பாண்டி லட்சுமி, மீனாம்பாள், மாலா, சுதா கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் கூறினார்.
