கோவில்பட்டி அருகே கோவிலுக்கு வந்த பக்தரிடம் மயில் ஒன்று அன்புடன் உறவாடி உணவருந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலை கிராமம் உள்ளது. இந்த குருமலையின் அருகே மலைக் குன்றுகள் மற்றும் காப்பு காடு உள்ளது. இங்குள்ள காப்பு காட்டில் அதிக அளவில் மான் மற்றும் மயில்கள் உள்ளன. மலைக்குன்று மற்றும் அதன் அடிவாரத்தில் முருகன், அய்யனார் கோவிலில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு நேற்று புதுபச்சரிசியை சேர்ந்த செல்வம் முருகன் என்பவர் சென்று விட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் மயில்கள் உலாவதை பார்த்தவர் தன் கையில் வைத்திருந்த நிலக்கடலையை அளித்தார். அப்போது ஒரு மயில் மட்டும் அவரைத் தேடி வந்து அவரின் கையில் இருந்த நிலக்கடலையை பெற்று உணவருந்தியது. அது மட்டுமல்லாது செல்வமுருகனுடன் அன்புடன் இந்த மயில் பழகி அசத்தியது. இந்தக் காட்சிகளை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.