கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை செலுத்துங்கள் என்று வணிகர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து அவர் கூறுகையில்; எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு தொல்லை அதிகமாக உள்ளது பாதுகாத்துக் கொள்ள தெருவிளக்கு எரியவில்லை, புதிதாக போடப்பட்ட தெருவிளக்குகளும் எரியவில்லை, மார்க்கெட் பகுதியில் அடிப்படை வசதிகள் கிடையாது, நகராட்சி கடைகளில் உள்ளே மழைநீர் வருகிறது, சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறை வசதிகள் கிடையாது, குப்பைகள் அங்கங்கே கிடைக்கிறது என்று அதிகாரியிடம் யாரும் கேட்க வேண்டாம்.
நாங்கள் வாடகை வசூல் செய்யும் அதிகாரியிடம் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் நாங்கள் வாடகை கட்டுகிறோம் என்று அதிகாரியிடம் கூறினோம் உயர் அதிகாரிக்கு கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் முடியாது இந்த வாடகை கட்டவில்லை என்றால் கடையை சீல் வைத்து விடுவோம்
என்று மிரட்டினார்கள் அதிலும் அதிகாரிக்கு கீழ்மட்ட உள்ள நகராட்சி ஊழியர் கழிப்பிடம் வசதி இல்லை என்றால் கட்டண கழிப்பிடம் உள்ளது என்று கூறினார் சிறுநீர் கழிப்பதற்கு
ஒரு முறை பயன்படுத்துவதற்கு பத்து ரூபாய் என்று கூறினான் அதற்கு டெண்டர் அதிகமாக எடுத்துள்ளனர் அதனால் 10 ரூபாய் கொடுத்து தான் போக வேண்டும் 10 ரூபாய் கொடுத்து சிறுநீரகம் கழிக்க முடியவில்லை என்றால் உனக்கெல்லாம் எதற்கு நகராட்சி கடை சொந்தக் கட்டிடத்தில் வாடகைக்கு இருந்தால் என்ன செய்வீர்கள் என்று எங்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் என அனைவரும் காவல் நிலையத்தில் எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் எங்களை வேலை செய்ய விட மாட்டார்கள் அவதூறாக பேசுகிறார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் வால்பாறை காவல் நிலையம் நடுநிலையாக செயல்பட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இனியும் அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க முடிந்த அளவு நகராட்சி அலுவலகத்திலேயே கடை வாடகையே செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுங்கள் யாரும் ஏமாறாதீர்கள் ஒரு சிலர் கடைகளுக்கு உரிமைக்கு புதுப்பித்துக் கொள்வதற்காக பல ஆயிரம் ரூபாய் கொடுத்தும் இன்னும் கடை உரிமை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர் நீங்களும் இது மாதிரி ஏமாறாதீர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் நகராட்சி பணம் கோடி கோடியாக கொள்ளை அடிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன நகராட்சி மூலம் செய்யப்படும் வேலைகள் தரமற்றதாகும் உள்ளது இதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு தேவை பணம் இதையெல்லாம் நினைத்து உணர்ச்சிவசப்பட்டு வாடகை வசூல் பண்ணவரிடம் கேட்டு தயவுசெய்து கேட்டு விடாதீர்கள் வாடகையை கண்டிப்பாக கட்டுங்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியது தமிழக வணிகர் சம்மேளனத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் 15 லிருந்து தூய்மை பணியாளரை மதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வைத்து கொடியேற்றி இனிப்பு வழங்கி கொடி ஏற்றினோம் இனி வரும் காலங்களிலும் இது தொடரும் தூய்மை பணியாளரை நாங்கள் மதிப்போம் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக. குரல் கொடுப்போம் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.