பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களை முன்னிறுத்தி பொள்ளாச்சியில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. அரசியல் பாகுபாடு இன்றி பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் போன்ற பகுதிகளில் தனியார் வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் உள்ள மக்களிடம் யாருக்கும் இடையூறு ஏற்படாதவாறு கையெழுத்து பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை தனி மாவட்டமாக உருவாக்கப்படவேண்டும் என்று கோரிக்கை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டும் பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படாமல் இருந்துவருகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட திருப்பூர், கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி தனி மாவட்டமாக உருவானது. ஆனால், பொள்ளாச்சி கோட்டம் மாவட்டமாக தற்போது வரை உருவாகவில்லை. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பொள்ளாச்சியில் இருந்து பிரிந்த திருப்பூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பழனியை தலைமையாக கொண்டு மடத்துக்குளம், உடுமலை தாலூக்காக்களை இணைத்து தனி மாவட்டம் உருவாகும் என கூறப்பட்டு வருவதால் பொள்ளாச்சி மாவட்டம் ஆவது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், பழனி மாவட்டம் ஆவதை தடுப்பது எங்கள் நோக்கமல்ல. மாறாக பழனியை மாவட்டமாக்க தாலூக்காக்கள் பற்றாக்குறை இருப்பின் வேறு பகுதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் எந்தவொரு ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை. பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை பொள்ளாச்சியுடனே சேர்த்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுகிறோம்.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில், சேக்கல்முடி, முடீஸ், ஹைபாரஸ்ட், சோலையாறு டேம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாவட்ட தலைமை இடமான கோயம்புத்தூர் செல்ல வேண்டுமானால் 125 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது. வால்பாறை போன்ற மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோயமுத்தூர் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. வால்பாறை மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் வால்பாறை வந்துசேரவே இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகிறது. அப்படி இருக்கையில் அவர்கள் கோயம்புத்தூர் வந்த சேரவே குறைந்தபட்சம் எட்டு மணிநேரத்திற்கும் மேலாகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தங்களது குறைகளையோ அல்லது கோரிக்கைகளையோ தெரிவிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்கினால், வால்பாறை மக்கள் எளிதில் வந்து செல்லமுடியும். இதோடு ஆனைமலை தாலுகாவில் வசிக்கும் மக்களும் கோயம்புத்தூர் சென்று வருவதில் 80 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. பொள்ளாச்சி தாலுகா மக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல சுமார் 50 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருக்கிறது.
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டமாக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றோம். இப்பகுதி மக்களின் நிலையை புரிந்து கொண்டு மாவட்டமாக்க வேண்டுகிறோம் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.