வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால் பொதுமக்கள் அவதி! – சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா..?

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படும் நிலையில்
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு இது குறித்து கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மனுவில் பெறுநர் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை 600 009. மதிப்பிற்குரிய துணை இயக்குநர் அவர்கள், கிராம சுகாதார சேவைகள் மற்றும் குடும்ப நலன். 107-A ரேஸ்கோர்ஸ் சாலை, கோயம்புத்தூர் – 641 018.

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை இயக்குநர் அவர்களுக்கும் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் சார்பாகவும் எங்கள் அமைப்பின் சார்பாகவும் பணிவான வணக்கம்.

வால்பாறை அரசு ஆரம்ப மருத்துவமனை காந்திசிலை அருகில் உள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாமல் வரும் ஏழை எளிய தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமும், வேதனையும் படுகின்றனர். கடந்த காலங்களில் குறைந்தபட்சம் மாதத்திற்கு 25-க்கு மேல் பிரசவம் பார்க்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. தமிழகத்தில் தற்பொழுது மருத்துவத்துறை சிறப்பாக செயல்படும்பொழுது இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை பார்ப்பதற்கு கூட மருத்துவர் இல்லாமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. குறைந்த சம்பளத்தில் எஸ்டேட் பகுதியில் மருத்துவ வசதி இல்லாமல் இருப்பதாலும் அனைவரும் இம்மருத்துவமனையை நம்பியுள்ளனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இம்மருத்துவமனைக்காக மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதற்கு பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களை நியமித்து 24 மணிநேரமும் இப்பகுதி மக்களுக்கு தங்கு தடையில்லாமல் மருத்துவ சேவை கிடைக்க உறுதி செய்ய வேண்டுமென்று தங்களை பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலனை செய்து சுகாதாரத்துறை அமைச்சர்
நடவடிக்கை எடுப்பாரா என்பதை மக்களோடு மக்களாக நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts