வெம்பூர் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் ஊர்வலமாக சென்று தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டத்திற்குட்பட்ட வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, இராமசாமிபட்டி, பட்டித்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 2,700 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தி ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று வெம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் இருந்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி தலைமையில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு 300 தபால்கள் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் வருகின்ற 21ம் தேதி அனைத்து கட்சி சார்பாக மாபெரும் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு வெம்பூர் கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.