கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்படடி நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தினததை முன்னிட்டு
கோடை விடுமுறையில் மாணவர்கள் நூல்களை வாசிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை ஏப் 23.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அகச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக புத்தக தினம் குறித்து பேசும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான நம்பிக்கை, எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, காப்புரிமை போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1995 ஆம் ஆண்டு உலக புத்தக தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக உள்ளது.
மனித கலாச்சாரத்தை வடிவமைப்பதில் அவற்றின் உள்ளார்ந்த மதிப்புக்காகவும், நம்மைக் கல்வி கற்கவும், ஊக்குவிக்கவும், மகிழ்விக்கவும் அவற்றின் திறனுக்காகவும் புத்தகங்கள் மதிக்கப்பட வேண்டும். இந்த காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் அறிவு, கதைகள் மற்றும் கருத்துக்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தும் ஒரு வழியாகச் செயல்படுகின்றன, அவை அவற்றை விலைமதிப்பற்ற சொத்தாக ஆக்குகின்றன.
புத்தகங்கள் மூலம், நமது விமர்சன சிந்தனைத் திறனை மேம்படுத்தலாம், நமது சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தலாம் மற்றும் நமது தொடர்புத் திறன்களை மேம்படுத்தலாம். மேலும், புத்தகங்கள் யதார்த்தத்திலிருந்து தப்பித்து, ஆராயப்படாத உலகங்களுக்குள் நுழைய அனுமதிக்கின்றன, இது பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.
புத்தகங்கள் பற்றி சில பிரபலமான மேற்கோள்களான
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் – மகாத்மா காந்தி,ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் – விவேகாநந்தர்,ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவேன் – சார்லி சாப்லின் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்றால் அது நூலகத்தின் இருப்பிடம் மட்டுமே – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பன் யாரும் இல்லை – எர்னஸ்ட் ஹெமிங்வே,
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகம் மற்றும் நல்ல தூக்கம், இதுதான் சிறந்த வாழ்க்கை – மார்க் டிவெயின்.
முன்னோர்கள் நூல்களை வாசித்த தான் இன்று உலக அளவில் பேசப்படும் ஆளுமை மிக்க மனிதர்களாக திகழ்ந்தார்கள் மாணவச் செல்வங்களை நீங்களும் அதுபோல தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் கோடை விடுமுறைகளில் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று உங்களால் எவ்வளவு வாசிக்க முடியுமோ அவ்வளவு நூல்களை வாசிக்க வேண்டும் தினசரி செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார்.
மாணவர்கள் நூலக புத்தகங்களை வாசித்தனர். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.