கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை ஏப் 24. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபச்சார நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் முதல் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்து பேசும் பொழுது நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்கும் நிகழ்வாக மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் நூலகங்களுக்கு சென்று வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எட்டாம் வகுப்பு பயின்று ஒன்பதாம் வகுப்பிற்கு செல்லும் பொழுது ஆசிரியர் நடத்தும் பாடங்களை தினந்தோறும் படிக்க வேண்டும். தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் ஊரகத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் இன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அதை பயன்படுத்தி சிறப்பாக கல்வி பயில வேண்டும். போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளக் கூடிய வகையில் பள்ளியில் படிக்கும் பொழுது அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை மாணவர்கள் திட்டமிட்டு படித்தால் எழுதி வெற்றி பெறலாம்.
மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி அளிப்பதற்காகவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் 500 பேர் கொண்ட போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மாணவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் அதையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் கூறிய அறிவுரைப்படி கோடை விடுமுறையில் சின்ன சின்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும், தினசரி நூல்களை வாசிப்பது மூலம் ஆளுமை மிக்க மனிதர்களாக உருவாக முடியும். பள்ளிக்கல்வித்துறையில் வழங்கப்படும் பல்வேறு வகையான நலத்திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய்,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா,சத்துண அமைப்பாளர் புஷ்பலதா, சத்துணவு உதவியாளர் ஜோதி முத்து, அங்கன்வாடி உதவியாளர் ராதா உள்ளிட்டோர் கலந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள். நிறைவாக மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.