மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனம், பட்டா மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (10/04/2025) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள முத்து அரங்கில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மருத்துவம் மற்றும் மக்கள் வாழ்வுத்துறை சார்பாக 2 கோடி 28,944 ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பயன்பாட்டிற்கு பல்வேறு வகையான மருத்துவ உபகரணங்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக 93 பயனாளிகளுக்கு ரூ. 54 இலட்சம் 2,670 ரூபாய் மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 67 இலட்சம் 18,800 ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனம் ஆகியவற்றை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாட்ட சுகாதார அலுவலர் யாழினி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.