கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை செல்லும் வழியில் அட்ட கட்டி செக்போஸ்ட் உள்ளது. இந்த செக் போஸ்ட் அருகில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் காட்டு விலங்குகள் மற்றும் கரடிகள் சுற்றித் திரிகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செக்போஸ்ட் அருகிலேயே வனவிலங்கு காப்பகத்தார் குடியிருப்புகளும் அமைந்துள்ளது. வால்பாறைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வழியில் வண்டியை நிறுத்தி இறங்கி சிறிது தூரம் நடந்து செல்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அங்கு வனவிலங்குகள் மற்றும் கரடி பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனர். இது பாதுகாப்பு அற்ற செயலாகவே இருக்கிறது.
நேற்றைய முன்தினம் மாலை சுமார் மாலை 5 மணி அளவில் 108 வாகன ஓட்டுநர் மற்றும் வழியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கரடிகள் வருவதைப் பார்த்து வியந்து போனார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் வனவிலங்குகளால் எந்த நேரத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் எனவே வனவிலங்கு காப்பகத்தார் இதுகுறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வனவிலங்குகள் பொதுமக்களை தாக்காதவாறு சில பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.