முதல்வர் மு‌.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு!!

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு‌.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு.

கந்தர்வகோட்டை: சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் இணைந்து, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்” அமைக்க வேண்டும் என இன்று (24.04.2025) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதனை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்களமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பிற்கு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாநில துணைப் பொதுச் செயலாளர் அ. ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முத்தமிழறிஞர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் என்ற துறையை உருவாக்கி லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை பயிலக்கூடிய வாய்ப்பையும் கல்விக் கட்டணம் ரத்து, சிறப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்து இன்று சுயமரியாதை யோடு சமூகத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறியுள்ளதற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பொற்கால ஆட்சியை காரணம் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு கூற கடமைப்பட்டுள்ளோம்.

கலைஞர் அவர்கள் 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்கா. இத்தனை பணிகளுக்கிடையே அவர் எழுத்துப் பணியையும் விடவே இல்லை. நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் தொடாத் துறையே இல்லை எனலாம். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் இன்று கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் புரிவதற்கு முத்தமிழர்க்கு கலைஞரின் ஆட்சியை காரணம் என்பதற்கு மறுக்க இயலாது ஆசிரியர் நியமனம் தொடங்கி பள்ளிகள் உள்கட்டமைப்பு வரை பல்வேறு வகையான நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தி இந்தியாவிற்கு தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க கலைஞரின் பொற்கால ஆட்சியை காரணமாகும் .கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என இரண்டு துறைகள் உருவாக்கப்பட்டு இன்று தனித்தனி துறைகளாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் கல்வித்தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

அரசியல் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பெயரில் இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைத்தவரும் கலைஞர் அவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் கல்வித்துறையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கல்விப் புரட்சி செய்ததும் கலைஞரின் மாபெரும் சாதனைகளாகும்.

முத்தமிழறிஞர் கலைஞரின் வழித்தோன்றலில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ள சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவிப்பிற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்று நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் அவர்களுக்கும் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்து உயர் அலுவலர்களுக்கும், மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts