கோவை மாவட்டம் போத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா சாரிடபில் டிரஸ்ட் இணைந்து போத்தனூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் அடிப்படையில் 19-04-2025 சனிக்கிழமை காலை 10:00 மண முதல் 12:30 வரை நூராபாத் பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளி வளாகத்தில் வைத்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த முகாமை கோவை மாநகராட்சியின் 99 வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து உரையாற்றினார் மஸ்ஜிதுல் அக்ஸா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் போத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் Dr. வித்யா MBBS அவர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழு கலந்து கொண்டு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, மலேரியா போன்ற மருத்துவ பரிசோதனைகளும், நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுமார் 60 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இது போன்ற மக்களுக்கு பயனளிக்கும் இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தப்படும் என்று மஸ்ஜிதுல் அக்ஸா டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அபு காதர்.