விளாத்திகுளம்: கோவில், மடம், அறக்கட்டளை , வஃபுபோர்ட், இனாம் நிலங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும்…..
கீழவிளாத்திகுளம், கத்தாளம்பட்டி கிராம விவசாயிகள் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் சாகுபடி செய்து வரும் நிலங்களை மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் UDR ல் திருத்தம் செய்ய முயற்சிப்பதை கண்டித்தும்…..
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விவசாயிகளின் பெயரிலேயே பட்டா இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியும்…..
மீனாட்சி அம்மன் கோயில் பெயரில் UDR ல் திருத்தம் செய்யப்பட்ட வில்வ மரத்துப் பட்டி கிராம விவசாயிகள் பட்டாக்களை மீண்டும் விவசாயிகள் பெயரிலேயே மாற்றம் செய்ய வலியுறுத்தியும்….
தலைமுறை தலைமுறையாக பட்டா மற்றும் கிரையம் பெற்று அனுபவித்து வரும் நிலங்களை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திரப்பதிவுக்கு தடைகளை ஏற்படுத்தி வரும் அறநிலையத்துறை நடவடிக்கைகளை திரும்ப பெற்று வழக்கமான பத்திரப்பதிவு செய்து தர வலியுறுத்தியும்…
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் (18/4/25) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஆர். ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஏ. விஜய முருகன், மாவட்ட செயலாளர் பா. புவிராஜ் மாவட்ட தலைவர் ஆர். ராகவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கே ஜோதி மற்றும் லட்சுமண பெருமாள் மகாராஜன் பட்டாதாரி கண்ணதாசன்உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.