கோவை ராம் நகர் பகுதியில் நடைபெற்ற ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வுகளுக்கான unacademy பயிற்சி மையத் திறப்பு – விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசியவர், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்காக பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.மேலும், அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்த வளர்ச்சியை கண்டு வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் கூறினார்.தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், இளைஞர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் விதமாக WAVES மாநாடு மும்பையில் நடைபெற உள்ளதாகவும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கான உருவாக்கம் இந்தியாவில் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அரசு உருவாக்கி உள்ள இந்த வாய்ப்புகளை இளைஞர்கள் சிறப்பாக பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.
இதில் Unacademy இயக்குனர் நவின் பிரபு சிறப்பு விருந்தினர் அமைச்சர் எல் முருகன் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பிரியா செந்தில் கெளரவ விருந்தினர் செல்வம் ஏஜென்சிஸ் நந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.