தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால் DGP/ IPS அவர்களின் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் திரு.சரவண பாபு அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் திரு.கணேசன் அவர்கள் அறிவுறுத்தலின் படி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் விளாத்திகுளம் சார்பாக தீ தொண்டு வாரம் (14-04 2025 முதல் 20-04-2025 வரை) கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தினமும் போலி ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் பியர்ல் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனத்தில் நிலைய அலுவலர் திரு.மு.சங்கரன் அவர்கள் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.