கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அரசால் வக்ஃப் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதில் 115 திருத்தங்களை திருத்தியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் விவசாய சட்டத்தை பாராளுமன்றத்தில் வாபஸ் பெற்றது போல வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பதாக தெரிவித்தனர். வக்ஃப் சொத்து என்பது முஸ்லிம்களின் கல்விச்செலவு, பாதுகாப்பிற்கும்,வழிபாடு செலவிற்கும் ஆனது.அதனை பாதுகாக்க இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் தெற்கு தொகுதி தலைவர் ஷாஜகான் ததலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்க்கு தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் மாவட்ட பொருளாளர் மன்சூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிளாஸ்டிக் அப்பாஸ் சமூக ஊடகஅணி அனீஸ் தெற்கு தொகுதி செயலாளர் பாஷாமா வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் தெற்கு தொகுதி துணை தலைவர் பகதூர் சிங்கை தொகுதி தலைவர் ஆசிக் தொண்டாமுத்தூர் தொகுதி தலைவர் நாசர்
நிர்வாகிகள்:-
அக்கீம் பைசல் கபூர் சித்தீக் ஹக்கீம் ஜான்பாஷா ஆசிக் அர்சத் சகாபுதீன் சிக்கந்தர்
ஆகியோர் உடனிருந்தனர்.
-சீனி, போத்தனூர்.