தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் சமுதாயகூடத்தில் வைத்து குழந்தை உரிமைகளும் நீங்களும் (Cry) என்ற அமைப்பின் வாயிலாக “ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS)” தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்மன்றப் பொறுப்பாளர்களுக்கு தலைமைத்துவம் பற்றி சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS) இயக்குனர் திரு. சா.சாத்தையா தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் வேம்பார் சிந்தாமணி நகர், சிந்தாநகர், சூரங்குடி, குளத்தூர், மேல்மாந்தை, எதனப்பட்டி, சிலுவைபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் RWDS இயக்குனர் சாத்தையா “உணர்வுகளை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் குழந்தைகளிடம் தலைமையுரையாற்றினார். அப்போது பல்வகை உணர்வுகளான மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, அவமானம், துக்கம், ஆச்சர்யம், பயம் போன்ற உணர்வுகளை நடித்துக்காட்டி குழந்தைகளுக்கு எளிமையாக புரியும்படி கூறி குழந்தைகள் அனைவரும் தங்களது உணர்வுகளை அந்தந்த நேரங்களில் வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதையடுத்து
RWDS வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி சி. சத்யா குழந்தைகளின் தலைமைத்துவம் மேம்படுத்த வேண்டி தலைவரைக் கண்டுபிடி என்ற தலைப்பில் குழந்தைகளிடம் பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அத்தோடு தலைவனைக் கண்டுபிடி என்ற விளையாட்டின் மூலம் தலைமைத்துவம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில் கலந்து கொண்ட சிறுவர் மன்ற பொறுப்பாளர்களுக்கு RWDS சார்பில்
மதிய உணவு வழங்கப்பட்டு பின் “கனவு மெய்ப்படும்” என்ற தலைப்பில் குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் RWDS வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி ம. மரிய ஸ்டெல்லா தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளுதல் குறித்தும், RWDS திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.கனகவள்ளி குழு ஒருங்கிணைத்தல் குறித்தும், RWDS ஆவண தொகுப்பாளர் திருமதி ராஜாமணி முடிவெடுக்கும் திறன் குறிதான பயிற்சி அளித்தனர். இறுதியாக RWDS வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி ம.மரியஸ்டெல்லா நன்றியுரை கூற இப்பயிற்சியானது நிறைவு பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.