கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள சின்னார் பதிபழங்குடி மக்களின் குடியிருப்பு பாதுகாப்பு இல்லாமல் கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், தற்பொழுது கடும் மழை பெய்வதால் பாதுகாப்பற்று மழை நீரில் நனைந்து தனது வாழ்வாதாரத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இப்பகுதி பழங்குடி மக்கள் மாவட்டம் நிர்வாகம் வனத்துறை இவர்களுக்கு மழைக்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுகிறது.
மாவட்ட நிர்வாகம் தற்பொழுது ரெட் அலாட் அறிவிக்கப்பட்டதால் 100% பாதுகாப்பு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து ஆனைமலை மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பாவி அடித்தட்டு பழங்குடி மக்களை மழைக்காலங்களில் எவ்வாறு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்பது நினைத்துப் பார்க்கவே வேதனையாக உள்ளது.
இனியும் காலம் தாழ்த்தாமல் இப்பகுதி பழங்குடி மக்களுக்கு பாதுகாப்பை உடனடியாக செய்து தர வேண்டும் என ஆனைமலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கமும் மாவட்ட நிர்வாகத்தை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் இல்லை என்றால் மீண்டும் வலுவான போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
-P.பரமசிவம்.