விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிறிய மாடு மற்றும் பூஞசிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இப்போட்டியை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என். கே. பெருமாள், மோகன் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டுவண்டி முதலிடத்தினை பெற்றது.

இதனைத்தொடர்ந்து 4 கிலோமீட்டர் தொலைவில் 36 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியிலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி முதல் பரிசினை வென்றது. அதிமுக சார்பில் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள் முதல்வர் பிறந்தாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில்u நூற்றுக்கணக்கான மகளிருக்கு அதிமுக சார்பில் சேலைகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முன்னாள் விளாத்திகுளம் ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தனஞ்ஜெயன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், போடுசாமி,தனவதி, அதிமுக நகரச் செயலாளர்கள் மாரிமுத்து, ராஜகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் வரதராஜபெருமாள், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த், சுரேஷ், மகளிர் அணி சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts