தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் .இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வட்டத்தில் 1434-ம் ஆண்டிற்கு வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) 14.05.2025 முதல் 21.05.2025 வரை நடைபெற இருந்தது. தற்போது, நிர்வாக காரணத்தினால் வருவாய் தீர்வாய தணிக்கை 26.05.2025 முதல் 30.05.2025 வரை கீழ்க்கண்ட விபரப்படி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
கீழத்தட்டப்பாறை குறுவட்டத்திற்கு 14.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 26.05.2025 அன்று நடைபெறும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கீழத்தட்டப்பாறை மற்றும் முடிவைத்தானேந்தல் குறுவட்டத்திற்கு 15.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 27.05.2025 அன்று நடைபெறும்.
முடிவைத்தானேந்தல் மற்றும் புதுக்கோட்டை குறுவட்டத்திற்கு 16.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 28.05.2025 அன்று நடைபெறும்.
புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி குறுவட்டத்திற்கு 20.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 29.05.2025 அன்று நடைபெறும்
தூத்துக்குடி வட்டத்திற்கு 21.05.2025 நடைபெற இருந்த ஜமாபந்தி தற்போது 30.05.2025 அன்று நடைபெறும்.
எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை விண்ணப்பங்கள், அந்தந்த கிராமங்களுக்குரிய வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாளில், வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.