தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடியில் 60 வயது சித்த மருத்துவர் நீட் தேர்வினை எழுதினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் இன்று நீர் தேர்வு நடந்தது. தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் 480, தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480, எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 360, கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 480 என மொத்தம் 1,800 போ் நீட் தோ்வை எழுதினர்.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் பச்சைமால் 60 வயதில் தன்னம்பிக்கையுடன் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்தார். மாணவ மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைய வேண்டாம், விபரீத முடிவு எடுக்கக் கூடாது காலம் இருக்கிறது. என்று தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியபடி தேர்வு எழுத சென்றார்
மத்திய அரசு நீட் தேர்வு எழுத வயது வரைமுறை கொண்டுவர வேண்டும், தமிழக அரசு சிபிஎஸ்சி கல்விக்கு இணையாக பாடத்திட்டத்தினை தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.