கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட மண்டபத்தில் தண்ணீர் இல்லாமல் 3 மணி நேரத்திற்கு மேல் பொதுமக்கள் தவிப்பு…..
வால்பாறை பொதுமக்கள் அதிகமாக காதுகுத்து மற்றும் பொது நிகழ்ச்சிகளை இந்த மண்டபத்தில் நடப்பது வழக்கம் மேலும் அரசியல் சம்பந்தமான விழாக்கள் அனைத்தும் இந்த மண்டபத்தில் நடந்து வருகிறது. இன்று பொதுமக்களின் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தண்ணீர் குழாய்களில் நின்று விட்டது இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் சென்று தாழ்மையுடன் பேச வேண்டிய அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆகையால் பொது மக்களுக்கு இது போன்ற சிரமங்களை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் . சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
நாளை வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
-திவ்யக்குமார்.