கோடை வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு சற்று ஆறுதல் கோடை வெயிலை சமாளிக்க கோவையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொழில் நுட்பத்திலான ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாறி வரும் காலநிலை மாற்றங்களால் வருடம் முழுவதும் குளு குளு நகரமாக இருந்த கோவை தற்போது சுட்டெரிக்கும் நகரமாக மெல்ல மாறி வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சாலையில் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாரை கோடை வெயில் மிகவும் வாட்டி வருகிறது.
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில்,கோவை மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் நின்றுகொண்டு வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசாருக்கு கோடை வெயிலை சமாளிக்க நவீன தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள ஏ.சி.வைத்த ஹெல்மெட்டை மாநகர காவல்வதுறை ஆணையர் சரவண சுந்தர் வழங்கி அசத்தியுள்ளார்.
கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள , பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஹெல்மெட்டில் உள்ள சிறிய வகை ஏ.சி.மெஷினை இயங்கச் செய்து குளுகுளு காற்று வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக தற்போது 36 ஏ.சி.ஹெல்மெட் வழங்கி உள்ளதாகவும்,கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு இது சற்று ஆறுதலை ஏற்படுத்தும் என மநகர காவல் துறை ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோயமுத்தூர் ரவுண்ட் டேபிள் 20 அமைப்பின் தலைவர் அருண் குணசேகரன் உடனிருந்தார்.
சுட்டெரிக்கும் வெயிலிலுக்கு போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் வழங்கியுள்ளது,போக்குவரத்து போலீசார் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.