விளாத்திகுளம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கால பூஜை நடக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப் பட்டு வருகிறது. இது போல் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இல்லாத கிராமக் கோவில் பூசாரிகளுக்கும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமய அறநிலை இந்து சமய அ யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத கிராமக் கோவில் பூசாரிகள் ஊக்கத் தொகை பெற தகுதியானவர்களை தேர்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூசாரிகள் நல வாரியத்தில் புதிய உறுப்பி னர்கள் சேர்க்கைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப் பட்டு சிறப்பு முகாம் நடத்தி பதிவு சேர்க்கை நிறைந்த உடன் இத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு ரூ.1,500 வழங்க வழங்க அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட இந்து அறநிலை யத்துறை மண்டலத்தில் விளாத்திகுளம் பகுதியில் வரும் 21தேதி சிறப்பு முகாம் நடத்த அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்பு மணி உத்தரவிட்டுள்ளார். விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மே 21 தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த உதவித்தொகைகளை பெற விரும்புவோர் ஆண்டு வருமானச்சான்று (உச்ச வரம்பு ஒரு லட்சம்), கோவில் அமைவிட சான்று (வி.ஏ.ஓ.. அளித்தது). எத்தனை ஆண்டுகளாக கிராமக் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பதற்கான சான்று. கோவில் எத்தனை ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதற்கான சான்று, பூசாரியின் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வயது சான்று (60 வயதிற்கு கீழ்), பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய விபரங்களுடன் விளாத்திகுளம் சரக ஆய்வாளர் தனுசூர்யா (8098909904) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.