Trending

வால்பாறையில் கரடி தாக்கியதில் தம்பதிகள் படுகாயம்!- வருமுன் காப்போம் தமிழக முதல்வரின் எண்ணத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மலைவாழ் மக்களின் கிராமமான கருமுட்டி செட்டில் மெண்டல் பகுதியில் இருந்து கடும் மழையும் பொறுப்பெடுத்தாமல் அத்தியாவசிய தேவைக்காக வால்பாறைக்கு வரும்போது சிவ முத்துவையும் அவரது மனைவியையும் கரடி தாக்கியதில் படு காயம் அடைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். வனத்துறை அலுவலர்கள் மருத்துவமனையில் படுகாயம் அடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி உதவித் தொகையும் மேல் சிகிச்சைக்காக தேவையான ஏற்பாடும் செய்து கொடுத்துள்ளனர்.

உண்மையாலும் வரவேற்கக் கூடியது என்றாலும் தொடர்ந்து வனவிலங்கு தனக்கு தேவையான உணவுகள் இல்லாமல் மனிதர்களை தாக்கும் அவல நிலை வால்பாறையில் தொடர்கிறது என குற்றச்சாட்டு எழுகிறது.

தமிழக அரசு வருமுன் காப்போம் என்று சொல்லி பல வகைகளில் பல திட்டங்களை வகுக்கிறது ஆனால் வன விலங்கிலிருந்து அடித்தட்டு மக்களை வன விலங்கு தாக்காமல் இருக்க வருமுன் பாதுகாக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

வனவிலங்குக்கு தேவையான உணவுகளை அடர்ந்த வனப்பகுதியில் செய்து கொடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் இனியும் நடக்காமல் இருக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் வனவிலங்கு தாக்குதலில் இருந்து பாதுகாக்க வருமுன் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாவட்ட நிர்வாகத்தை பொது நலத்துடன் கேட்டுள்ளனர்.

நாமும் இது தொடர்பாக ஆய்வு செய்யும் பொழுது வனவிலங்கு தாக்கிய பிறகு மருத்துவ மனைகளில் போய் உதவித்தொகை வழங்குவதும்,தேவையான சிகிச்சைக்கு உதவி செய்வதும் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களும், செய்திகளாகும் வருவது வரவேற்கிறேன். உண்மையிலே வருமுன் பாதுகாக்கப்பட்டால் எந்த பிரச்சனை இருக்காது என்பது எதார்த்தமான உண்மை இனியும் அரசும், ஆட்சியாளர்களும், செய்து கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-P.பரமசிவம்
வால்பாறை

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts