கோவை மாவட்டம் வால்பாறை தற்பொழுது எஸ்டேட் மற்றும் வால்பாறை பகுதிகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் காய்ச்சல் ,இருமல், சளி,தொந்தரவு உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் சுகாதாரமில்லாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில்
சுத்தமாகவும் சுகாதாரமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வால்பாறை நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் அவர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக நம்மிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கூறுகையில்; தற்பொழுது மழைக்காலம் எஸ்டேட் வால்பாறை பகுதியில் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதில்லை. தமிழக அரசு அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வால்பாறையிலும் வழங்க வேண்டும். வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொசு மருந்துகளும் அடிக்க வேண்டும் என்று அதிகாரிகளே கேட்டுக்கொள்கிறேன். வால்பாறை அரசு மருத்துவமனை,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் ஆய்வு செய்து சாமானிய அடித்தட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.
👆🏻